மூன்று துறவிகள் – LEO TOLSTOY

Prayer is an invisible tool which is wielded in a visible world. – Leo Tolstoythree-hermits

கிறித்தவ பாதிரியார் ஒருவர் ரஸ்யாவின் அர்ச்சியெஞ்சல் நகரிலிருந்து வெள்ளை கடலில் அமைந்துள்ள வடக்கு ரசியாவின் சால்வெட்ஸ் மடாலயம் நோக்கி கடற்பயணம் மேற்கொண்டிருந்தார் அதே கப்பலில் மேலும் சில யாத்திரிகர்கள் புனித பயணம் மேற்கொண்டு இருந்தனர், கடற்பயணம் எந்த தடங்கலுமின்றி சென்றுகொண்டிருந்தது வானிலையும் அமைதியாக இருந்தது, கடற்காற்றும் அவர்கள் பயணத்திற்கு ஏற்ற திசையில் வீசிக்கொண்டிருந்தது,

புனித பயணம் மேற்கொண்டவர்கள் கப்பலின் மேல் தளத்தில் அமர்ந்தும் உணவருந்தியும், படுத்துக்கொண்டும் ஒருவருக்கொருவர் உரையாடி கொண்டும் இருந்தனர், அப்பொழுது கப்பலின் மேல்தளத்திற்கு வந்த கிறித்தவ மத குரு அனைவரையும் பார்த்துக்கொண்டிருந்தபோது ஒரு சிலர் கப்பலின் முற்பாகத்தில் நின்றுகொண்டு ஒரு மீனவர் கடலின் ஒரு பகுதியை சுட்டி சொல்வதை ஆச்சரியத்துடனும் வியப்புடனும் கேட்டுக்கொண்டிருப்பதை கண்டவர் அங்கே அந்த மீனவர் காட்டிய திசையில் சூரிய ஒளியில் ஜொலிக்கும் கடல் அலைகளை தவிர வேறொன்றும் தெரியாத நிலையில் அந்த மீனவரை நோக்கி நெருங்கி சென்ற பாதிரியாரை கண்ட அங்கிருந்த மற்ற பிரயாணிகள் பேச்சை நிறுத்தி அமைதியானதுடன் தங்கள் தலைப்பாகையை கழற்றி தலைவணங்கி அவருக்கு வணக்கம் தெரிவித்தனர்.

உங்களுக்கு இடைஞ்சல் செய்வதாய் எண்ணவேண்டாம் நண்பர்களே ! இருப்பினும் அந்த மீனவ நண்பர் எதை குறித்தோ  சுவாரசியமாக பேசிக்கொண்டிருக்கிறார் என்பதை அறியவே வந்தேன்….  என்றார் பாதிரியார் .

அங்கிருந்தவர்களில் சற்று துணிவுடையராக தெரிந்த வணிகர் ஒருவர் பதில் சொன்னார் ‘அவர் எங்களுக்கு அங்கே வாழும் துறவிகளை பற்றி கூறிக்கொண்டிருந்தார் அய்யா’

‘எந்த துறவிகள்? எங்கே வாழ்வதாக சுட்டிகாட்டினீர்கள்? நான் அவர்களை பற்றி அறிய ஆவலாக உள்ளேன், அவர்களை பற்றி சொல்லுங்கள்’ என்றவாறே அருகிலிருந்த ஒரு பெட்டியின் மீது அமர்ந்தார் பாதிரியார் .

துறவிகளை பற்றி சொல்லிக்கொண்டிருந்த மீனவர் பேசத்துவங்கினார் ‘ அதோ அங்கே, அவர்கள் தங்கள் ஆன்ம முக்திக்காக அந்த சிறுத்தீவில் வசிக்கின்றனர்….’ என ஒரு திசையை குறிப்பிட்டு சொன்னார்.

‘எங்கே இருக்கிறது அத்தீவு, எனக்கொன்றும் தெரியவில்லையே’ என்றார் பாதிரியார்

இங்கே பாருங்கள் நான் சொல்லும் திசையில் அங்கே தெரிகிறது பாருங்கள் ஒரு மெல்லிய மேகக்கீற்றை போல தெரிகிறதே அதுதான் அந்த தீவு என்றார் மீனவர்.

ஆனால் கடலுக்கு பழக்கமற்ற பாதிரியாரால் அங்கே எதையும் காணமுடியவில்லை கடலலைகளை தவிர,

எனக்கு ஒன்றும் தெரியவில்லை! பரவாயில்லை யாரந்த துறவிகள் அவர்களை பற்றி கூறுங்கள் என்றார் பாதிரியார் .

அவர்கள் புனித மகான்கள், அவர்களை பற்றி நான் வெகுநாட்களாகவே கேள்விப்பட்டிருந்தேன் ஆனால் அவர்களை கடந்த வருடம்தான் சந்திக்க நேர்ந்தது என்ற மீனவர் அவர்களை இவாறு சந்தித்தேன் என்றும் அங்கே நடந்தது குறித்தும் கூறினார்

ஒரு முறை கடலில் மீன்பிடிக்க செல்லும்போது வழி தவறி சென்றதாகவும் அப்பொழுது எங்கே இருக்கிறோம் என அறியாமல் இரவில் அந்த தீவில் கரை சேர்ந்து மறுநாள் காலை அங்கே உதவி தேடி அலைந்தபோது அந்த துறவிகள் வசித்த மண்குடிசைசையை கண்டதாகவும் முதலில் ஒரு வயது முதிர்ந்த துறவியும் பிறகு மற்ற இருவரையும் சந்தித்ததாகவும் அவர்கள் தனக்கு உணவளித்து தன் படகினை சீர் செய்து தனக்கு வேண்டிய உதவிகளை செய்ததாக கூறினார் மீனவர்.

பாதிரியார் : அவர்கள் பார்க்க எப்படி இருந்தனர்

மீனவர் : ஒருவர் வயதுமுதிர்ந்த கூன் முதுகுடன் எப்படியும் நூறு வயதிற்கும் மேலிருக்கும் பாதிரியர்களை போன்ற நீண்ட மேலங்கியினை அணியிருந்தார் அவர் வெண்தாடி பச்சை இளஞ்சாயம் கொண்டதாகவும் சுவர்கத்து தேவதூதர்களை போன்ற புன்னகையுடன் காணப்பட்டார், இரண்டாமவர் உயரமான தோற்றமுடையர் அவரும் வயதானவர்தான் பழைய கிழிந்த விவசாயிகள் அணியும் மேலங்கி ஒன்றினை அணிந்திருந்தார் அவரின் அகலமான வெண்தாடி மாயாஜால் பூத்த நிறமும் மிகவும் வலிமையாகவும் இருந்தார் என் படகினை எந்த உதவியும் இன்றி ஒரு சிறு வாளியை இழுப்பதை போல இழுத்தார் அவரும் அன்பும் உற்ச்சாகமும் உடையவர், மூன்றாம் துறவியும் உயரமானவர் அவரின் பனியை போன்ற வெண்ணிற தாடி அவரின் கால்மூட்டுவரை நீண்டு வளர்ந்திருந்தது கண்களை தாண்டி கண் புருவமுடிகள் வளர்ந்து தொங்கி கொண்டு இருந்த அவர் கடுகடுப்பாக இருந்தார் உடை என்று இடையில் ஒரு பாயினை போன்ற ஒன்றை தவிர வேறொன்றும் அணியவில்லை…

பாதிரியார் : அவர்கள் ஏதும் பேசிக்கொண்டார்களா

மீனவர் : பெரும்பாலும் அவர்கள் பேசிக்கொள்ளவில்லை ஒன்றிரண்டு வார்த்தைகளை தவிர ஒருவர் ஒருவரை நோக்கி பார்க்கும் பார்வையின் அர்த்தத்தை புரிந்துகொண்டு நடக்கின்றனர்,  நான் அவர்களில் உயரமானவரை  நீங்க வெகுகாலம் இங்கே வசிக்கிறீர்களா என கேட்டதற்கு அவர் கோபமாக எதோ ஒன்றை தனக்குள் பேசிக்கொண்டார் இதை கண்ட மூத்த துறவி அவர் கைகளை பிடித்த அமைதி படுத்தினார் அவர் பேசியது எங்கள் மீது கருணை காட்டு என்பது மட்டும்தான்,

அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது கப்பல் அச்சிறு தீவினை நெருங்கி சென்று கொண்டிருந்தது,

கருணை மிகுந்த குருவே தற்போழுது நீங்கள் அந்த தீவினை பார்க்கலாம் என மீனவர் சொன்னபோது பாதிரியாரால் அந்த சின்னஞ்சிறு தீவினை காணமுடிந்தது, சற்று நேரம் உற்று நோக்கியவாறு எழுந்து கப்பல் மாலுமியிடம் சென்று விசாரிக்க துவங்கினார்

பாதிரியார் : அந்த தீவினை பற்றி உங்களுக்கு தெரியுமா

மாலுமி :அதற்க்கு எந்த பெயரும் இல்லை இதை போலவே பல தீவுகள் இந்த கடலில் உள்ளன

பாதிரியார் : தங்கள் ஆன்ம முக்திக்காக அங்கே துறவிகள் வாழ்வதாக சொல்கிறார்கள் அது உண்மையா

சொல்கிறார்கள் ஆனால் உண்மையா என தெரியவில்லை சில மீனவர்கள் அவர்களை பார்த்ததாகவும் கூறுகின்றார் ஆனால் அவைகளில் பெரும்பாலும் கட்டுக்கதைகளே என்றார் மாலுமி

நிச்சயம் செல்லவேண்டும் அதற்க்கு என்ன வழி  என கேட்டார் பாதிரியார்

அங்கே கப்பல் செல்லாது என்றும் வேண்டுமெனில் படகில் செல்லலாம் என்றும் அதற்க்கு கப்பல் தலைவரின் அனுமதி வேண்டும் என கூறியதும் பாதிரியார் கப்பல் தலைவரை சந்திக்க விரும்பினார்.

பாதிரியாரை சந்தித்த கேப்டன் அந்த துறவிகள் நீங்கள் சந்திக்கும் அளவு உயர்ந்தவர்கள் அல்ல மேலும் அந்த முட்டாள்களை பற்றி பல கட்டுக்கதைகள் இங்கே உலாவருகின்றன ஆகவே உங்கள் திட்டத்தை கைவிடுங்கள் நீங்கள் எடுக்கும் சிரமத்திற்கு அவர்கள் தகுதியானவர்களுக்கு இல்லை நமக்கு ஏற்கனவே நேரம் அதிகம் செலவாகியுள்ளது என பலவழிகளும் முயன்று அவரின் மனதை திசைதிருப்ப முயன்றார் ஆனாலும் அந்த துறவிகளை சந்திப்பதில் மதகுரு உறுதியாக இருந்தார்,

இதனால் ஏற்படும் தடங்கல்களும் ஏனையவற்றுக்கும் தகுந்த அளவு பணம் தான் நஷ்டஈடாக வழங்குகிறேன் என பாதிரியார் உறுதியளித்தார்.

பாதிரியாரின் கோரிக்கை ஏற்கப்பட்டது தீவினை நோக்கி கப்பல் செலுத்தப்பட்டது கப்பலின் முற்பாகத்தில் பாதிரியார் அமர நாற்காலி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டது இதற்குள் இதை கேள்விப்பட்ட மற்ற பயணிகளும் கப்பலின் மேல்தளத்தில் குவிய துவங்கினர் அங்கே இருந்த சிலர் துறவிகளை காண்பதாகவும் மண்குடிசை தெரிவதாகவும் கூறினார் பாதிரியார் தொலைநோக்கி மூலம் மூவரும் ஒருவர் கையை ஒருவர் பற்றியபடி ஒரு பெரும் பாறை அருகே நின்று கொண்டிருப்பதை கண்டார்.

கப்பல் தலைவன் பாதிரியாரிடம் இதற்க்கு மேல் கப்பல் செல்லாது என்றும் தீவிற்கு செல்லவேண்டுமெனில் படகில் செல்லலாம் என்றும் தாங்கள் இங்கேயே நங்கூரமிட்டு நிற்பதாகவும் கூறினார்.

படகின் மூலம் கரையை அடைந்த பாதிரியாரை கண்ட வயது முதிர்ந்த துறவி அவரை வணங்கினார் பாதிரியார் அவர்களுக்கு ஆசிகளை வழங்கி பேச துவங்கினார்

உங்களை பற்றி மற்றவர்கள் பேசியதை கேட்டேன் மனித கடவுள்கள் என்றும் தங்கள் ஆன்ம முக்திக்காக இங்கே வசிப்பதாகவும் தேவன் இயேசு கிறித்துவிடன் உங்கள் சக மனிதர்ககளுக்காக பிரார்த்திப்பதாகவும் கூறினார்கள், நான் கிறித்துவின் கடை நிலை ஊழியன், அவரின் அருளால் கிறித்துவின் கருணையை தொடர்ந்து போதிப்பவன் உங்களை காணவிரும்பி இங்கே வந்துள்ளேன் உங்களுக்கு நான் என்ன செய்யவேண்டும் எதை போதிக்க வேண்டும் சொல்லுங்கள் கடவுளின் ஊழியர்களே என்றார் பாதிரியார் .

முதிய துறவி மற்றவர்களை நோக்கி பார்த்து புன்னகை புரிந்துகொண்டார் தவிர மூவரும் எதுவும் பேசாது அமைதிகாத்தனர்..

சொல்லுங்கள் உங்கள் ஆன்ம முக்திக்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள் இந்த தீவில் கடவுளுக்கு என்ன ஊழியம் செய்கிறீர்கள் என வினவினார்பாதிரியார் .

இரண்டாவது துறவி மூத்த துறவியை நோக்கி சைகை காட்டினார் , வயதான மூத்த துறவி புன்னகையுடன் கூறினார் கடவுளுக்கு எப்படி ஊழியம் செய்வது என்று எங்களுக்கு தெரியாது நாங்கள் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்கிறோம் அவ்வளவே என்றார்

பாதிரியார் : அப்படியெனில் நீங்கள் கடவுளை எப்படி பிரார்த்தனை செய்வீர்கள்

நீங்கள் மூவர் நாங்கள் மூவர் எங்கள் மீது கருணைகாட்டுங்கள் என பிரார்த்திப்போம் என மூத்த துறவி மறுமொழி சொன்னபோது மற்ற துறவிகளும் வானை நோக்கி நீங்கள் மூவர் நாங்கள் மூவர் எங்கள் மீது கருணைகாட்டுங்கள் என ஒரே குரலில் பிரார்த்தனையை சொன்னார்கள்.

புன்னகை புரிந்த பாதிரியார் நீங்கள் புனித மும்மை தத்துவத்தை பற்றி அறிந்துள்ளீர்கள் என்பது அறியமுடிகிறது ஆனால் உங்கள் பிரார்த்தனை சரியான முறையில் இல்லை கூடவே நீங்கள் என் அபிமானத்தை பெற்றுவிட்டீர்கள் நீங்கள் கடவுளின் கருணையை விரும்புகிறீர்கள் ஆனால் எப்படி அவருக்கு ஊழியம் செய்ய வேண்டும் என நீங்கள் அறியவில்லை, இது போல பிரார்த்தனை செய்ய கூடாது நான் உங்களுக்கு எப்படி பிரார்த்தனை செய்ய வேண்டும் என போதிக்கிறேன் ஆனால் இது என் சொந்த வழிமுறை அல்ல அனைத்து மனிதர்களும் கடவுளை எப்படி வணங்கவேண்டும் என புனித நூல்களில் வெளிப்படுத்தப்பட்ட கட்டளை

மேலும் பாதிரியார் கடவுள் எவ்வாறு தன்னை மனிதகுலத்திற்கு வெளிப்படுத்திக்கொண்டார் என்றும் பரமபிதா தேவகுமாரன் பரிசுத்தஆவி போன்றவற்றையும் விளக்கினார்

மனிதர்களை ரட்சிக்க வந்த தேவகுமாரன் பராமபிதாவை எப்படி பிரார்த்திக்கவேண்டும் என நமக்கு வழிகாட்டியுள்ளார் கேளுங்கள் நான் எப்படி சொல்கிறேனோ அதை மீண்டும் சொல்லுங்கள் என கூறி பின் பிரார்த்தனையை துவங்கினர்,

எங்கள் பிதாவே

முதல் துறவி முதலில் சொல்ல பின் மற்ற இருவரும் அவரை தொடர்ந்து எங்கள் பிதாவே என கூற

பரமண்டலத்திலிருக்கும்

இரண்டாம் துறவி பிழையான வாக்கியத்தை கூறவும் மூன்றாம் துறவியின் தாடி அவரின் வாய்க்குள் செல்லுமளவு இருந்ததால் அவரால் சரியாக உச்சரிக்க முடியவில்லை முதல் துறவிக்கோ பற்கள் இல்லாததால் அவருக்குள் எதோ சொற்களை முணுமுணுத்து கொண்டார்

ஆனாலும் பாதிரியார் மீண்டும் பிரார்த்தனையை கூறி அவர்களை மீண்டும் மீண்டும் உச்சரிக்க சொன்னார் அருகிலிருந்த பாறையின் மீது அமர்ந்த பாதிரியார் அவர்களின் தவறுகளை திருத்தி பத்து முறை நாற்பது முறை நூறு முறைகளுக்கு மேலும் அவர்களை பிரார்த்திக்க சொன்னார்

அவர்கள் சரியான முறையில் பிரார்த்திக்கும் வரை அங்கேயே காத்திருந்தார் பாதிரியார் , அவர்கள் பாதிரியாரை பின் தொடர்ந்து சொல்ல சிரமப்பட்டார்கள் என்றாலும் தங்களுக்கு தாங்களே சரியாக சொல்லிக்கொண்டார்கள் முதலில் உயர்ந்த இரண்டாம் துறவி பிரார்த்தனையை முழுவதுமாக கூறினார் பின்னர் மற்ற இருவரும் பாதிரியார் சொன்ன படி பிரார்த்தனையை உச்சரிக்க துவங்கினர்….

இரவு நிலவு வந்துவிட்டதால் வெகுநேரம் செலவிட்டுவிட்டதாலும் பாதிரியார் அங்கிருந்து புறப்பட்டபோது தரையில் விழுந்து வணங்கிய மூன்று துறவிகளையும் நெற்றியில் முத்தமிட்டு தான் சொன்னபடியே கடவுளை பிரார்த்தனை செய்யுங்கள் என கூறி கபடகில் ஏறி கப்பலுக்கு சென்றார் பாதிரியார்.

துறவி படகில் ஏறி கப்பலுக்கு செல்லும் வழியெங்கும் அவர்களின் பிரார்த்தனை ஒலி ஒலித்துக்கொண்டிருந்தது தூரம் செல்ல செல்ல அவர்களின் குரலோசை மறைந்தாலும் அவர்களின் உருவங்கள் மட்டும் நிலவொளியில் காணமுடிந்தது பாதிரியார் கப்பலுக்குள் வந்ததும் நங்கூரங்கள் தூக்கப்பட்டு பாய்மரங்கள் விரிக்கட்டது கப்பல் மீண்டும் தன் பயணத்தை துவங்கியது,

கப்பலின் பின் பகுதியில் அமர்ந்த துறவியின் கண்களில் இப்பொழுது துறவிகள் தென்படவில்லை தீவு மட்டுமே அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கடலின் அலைகள் மட்டுமே அவர் கண்களுக்கு தெரிந்தன
அனைவரும் கப்பலில் உறங்கியபின்னும் பாதிரியார் உறக்கம் வராமல் துறவிகள் வாழ்ந்த தீவினை திசையை பார்த்துக்கொண்டிருந்தார் எத்தனை நல்ல மனிதர்கள் அவர்கள் அவர்களுக்கு உதவி செய்ய வாய்ப்பு தந்த இறைவனுக்கு மனதிற்குள் நன்றி கூறி கொண்டார் அதே சம்பவங்களை நினைத்து கொண்டிருந்தவரின் கண்களில் திடுமென நிலவில் இருந்து பாதை போன்ற வெண்ணிற ஓளி ஒன்றினை கண்டவர் அது கடற்பறவியாக இருக்கும் என நினைத்தார் நிலவொளியில் ஜொலிக்கும் அது ஒரு வேலை சிறு படகாக கூட இருக்கலாமோ என எண்ணினார் ஆனாலும் கூட வெகுவேகமாக கப்பலை நெருங்கிய அந்த ஓளி குறித்து குழம்பினார் பாதிரியார், மிக தூரத்தில் தெரிந்த அந்த ஓளி மிக வேகமாக நெருங்கியது இத்தனை வேகமாக படகுகள் செல்லாதே இது படகு பறவையோ அல்ல இது நம்மை நோக்கி வருகிறது என உணர்ந்தவர் அங்கே இருந்த மாலுமியிடம் அங்கே பாருங்கள் நண்பரே அதென்ன ஓளி உங்களால் காணமுடிகிறதா என கெட்டவரின் திசையில் நோக்கிய மாலுமி அதிர்ச்சியின் உச்சத்தில் சொன்னார் ‘கடவுளே அந்த மூன்று துறவிகளும் நம்மை நோக்கி கடலில் ஓடி வருகின்றனர்’

இதை கேட்ட பயணிகள் அனைவரும் கடலை பார்த்தனர் மூன்று துறவிகளும் ஒருவர் கையை ஒருவர் பற்றியவாறு கடலில்,  பனியில் சறுக்கி செல்வதை போல வந்து கப்பல் அருகாமையில் நின்று

கடவுளின் ஊழியரே நீவிர் எங்களுக்கு கற்றுத்தந்த பிரார்த்தனையை மறந்துவிட்டோம் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தோம் பிறகு நிறுத்தி மீண்டும் பிரார்த்தனையை தொடர்ந்த பொழுது  முதலில் ஒரு வார்த்தை மறைந்துபோனது பிறகு எல்லாமே மறந்துவிட்டது எங்களுக்கு எதுவும் நினைவில் இல்லை தயவு செய்து மீண்டும் சொல்லித்தாருங்கள் என வேண்டுகோள் வைத்தனர்

தனக்குத்தானே சிலுவை குறியிட்டுக்கொண்ட பாதிரியார் ‘துறவிகளே உங்கள் பிரார்த்தனை கடவுளுக்கு எட்டி விட்டது, உங்களுக்கு சொல்லித்தர என்னிடம் எதுவுமில்லை, எங்களை போன்ற பாவிகளுக்காகவும் சேர்த்து பிரார்த்தியுங்கள்’ என கூறி தலைவணங்கி நின்றார் துறவிகள் மீண்டும் வந்த வழியே சென்று மறைந்த போதும் அவர்களின் ஓளி வெகுபிரகாசமாக மறையாமல் இருந்தது…..

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Create a website or blog at WordPress.com

Up ↑

%d bloggers like this: