கோட்சே பேசுகிறேன் -3

நானா:பண்டிட் இதை நீங்கள் எழுதினாலே மக்கள் புரட்சி செய்வார்கள், அரசு கலக்கம் கொள்ளும் நிச்சயம் பணிந்து விடுவார்கள்,

நாதுராம் : இதை நான் ஏற்கனவே பிரிவினை பொழுது அரசியல் நிர்பந்தங்களுக்கு பணிந்து சுராவர்டி  சரணடைந்த பொழுது  எழுதி உள்ளேன், இன்னுமொன்று சுராவர்டி மட்டுமே சரணடைந்தார், அவருடைய தொண்டர்கள் அல்ல, அவர்கள் இந்துக்களை படுகொலையை  நிகழ்த்த சென்றுவிட்டிருந்தனர்,காந்தி இந்துக்கள் ஆயுதங்களை கீழே போட வேண்டும் என கூறி தனது உண்ணாவிரதத்தை துவக்கி இருந்தார், எனக்கு நன்றாக நினைவிருக்கிறது அன்று ,ஒரு  இந்து காந்தியிடம் இவ்வாறு கூறினார் ” நான் என் ஆயுதங்களை போடுகின்றேன் காரணம் என் மனம் தங்கள் மரணத்தை விரும்பவில்லை ஆனால் நான் என் குடும்பத்தினருடன் தனியே இஸ்லாமியர் வசிக்கும் பகுதியில் உள்ளேன்” என்று. ஹைதராபாத்தை விட்டு வெளியேறும் முன் அன்று இரவு அந்த இந்துவின் வீட்டிற்கு சென்றேன் அவரது குடும்பம் கதறியழுதபடி இருந்தனர், முஸ்லிம்களால் அவரின் எட்டுவயது மகன் கொல்லபட்டிருந்தான்,தன்னை பாதுகாக்க அவரிடம் எந்த ஆயுதமும் இல்லை, அவரின் இறந்த மகனை என் கைகளில் கிடத்தி  அவர் கூறினார் ” இவன் ரத்தத்தை உன் மகாத்மாவிடம் கொண்டு சென்று கூறு அவர் மீண்டும் உண்ணாவிரதம் இருக்க செல்வாராயின் அதை நிறைவு செய்யும்போது ஆரஞ்ச் பழரசத்திர்க்கு பதில் என் மகனின் ரத்தத்தை குடிக்க சொல்” என்றார், என்னால் ஏதும் கூற இயலவில்லை, காந்தியை என் தேசத்தின் தந்தை என்று.அந்த நொடி எண்ணினேன் உறங்கும் அத்தனை முஸ்லிம்களையும் வீட்டிலிருந்து வெளியே இழுத்து வந்து அவர்களை வெட்ட வேண்டுமென இருப்பினும் என்னை நான் கட்டுபடுத்தி கொண்டேன், தன்னை பாதுகாக்க செய்யும் வன்முறை நியாயமானதே, இல்லையெனில் அது தவறான கலாச்சார நடவடிக்கையாகும், நான் மீண்டும் காந்தி தங்கியிருந்த இடத்திற்கு சென்றேன் ஆனால் அதற்க்கு முன்பாகவே அவர் காரில் சென்று விட்டதாக கூறினார்கள்,அவரை சந்திக்க எந்தவொரு காரணமும் இல்லை… அவர் ஒருவர் மட்டும்தான் கொலையுண்டவனுக்காகவும்  அந்த கொலையை செய்தவனுக்காகவும் ப்ரார்த்திக்கொண்டிருந்தார்.

நானா :பண்டிட் இந்த விஷயத்தில் நாம் நிச்சயமாக நாம் தாத்யராவின் ஆலோசனையை பெற வேண்டும்,


நாதுராம் : இல்லை தாத்யராவ் வேண்டாம் என சொன்னாலும் கூட, நான் என் முடிவை மாற்றி கொள்வதற்கு இல்லை,பிறகு ஏன் அவரை தேவையின்றி இதில் சம்பந்தபடுத்த வேண்டும்,இதில் தாத்யராவின் பங்களிப்பையோ அல்லது ஈடுபாட்டையோ நான் விரும்பவில்லை, அவர் ஏற்க்கனவே இந்த தேசத்திற்காக பல இன்னல்களை அனுபவித்துள்ளார்,இப்பொழுது நமது முறை, தாத்யராவ் ஒரு முறை கூறினார் காந்தி அரசியல்  துறவி எனில் அவர் சுவாமி ராமதாசை பின்பற்ற வேண்டும்,சுவாமி ராமதாஸ் சிவாஜி மகாராஜ்க்கு தேவைப்படும்போதெல்லாம் ஆலோசனை தந்தாரே தவிர அவர் எதிலும் தலையிடவில்லை அது போலவே,


நானா :பண்டிட் நீங்கள் உறுதியாக உள்ளீர்கள் எனில் நான் உங்களுக்கு வாக்களிக்கிறேன்……………


நாதுராம் :இரண்டு உறுதிமொழிகளை  நீங்கள் எனக்கு அளிக்க வேண்டும்


நானா :உறுதி அளிக்கிறேன்!


நாதுராம் : நான் கேட்பது  என்ன உறுதிமொழி என நீங்கள் கேட்கவில்லையே?


நானா :நிழல் ஒரு போதும் தனது உடலை எங்கே செல்கிறது அல்லது ஏன் செல்கிறது என கேட்பதில்லை, அது உடலுடன் எப்பொழுதும்  இருக்கிறது, அதுபோலவே நான் நடக்கும்பொழுது  நீங்கள் என் நிழல் இப்பொழுது நீங்கள் நடக்கிறீர்கள் எனவே நான் உங்கள் நிழல்,


நாதுராம் :நீங்கள் தர வேண்டிய முதல் உறுதிமொழி இதுதான் இந்த முறை நான் தனியாக நடக்கிறேன் நினைவில் கொள்ளுங்கள் தனியாக,


நானா : நீங்கள் என்னை சிக்கவைத்து விட்டீர்கள் 


நாதுராம் :ஆனால் நீங்கள் உறுதி அளித்துள்ளீர்கள் ,பொதுவான இடத்தில் மக்கள் முன்னிலையில் காந்தியை படுகொலை செய்ய போகிறேன், ஏனென்றால் நான் எனது கடமையை செய்ய போகிறேன்,மறைமுகமாக செய்தால் என் பார்வையில் கூட அது குற்றமாகிவிடும் , நான் தப்பிசெல்ல முயல மாட்டேன் பிறகு இயற்கையாகவே தூக்கிலிடப்படுவென்,


நானா :பண்டிட்!


நாதுராம்:ஒரு கொலை ஒரு மரணதண்டனை, இரண்டு மரணதண்டனைகளை நான் விரும்பவில்லை அதனால்  இதில் உங்கள் துணையோ பங்களிப்போ ஈடுபாட்டையோ விரும்பவில்லை,


நானா :பண்டிட் இத்தனை வருட நட்ப்பினை நீங்கள் முறிக்க சொல்கிறீர்களா?


நாதுராம் :நிச்சயமாக இல்லை தூக்கிலிடப்படும் தருவாயில் நான் நினைவு கூறுவதெல்லாம்  இந்த தேசத்தையும் என் பெற்றோரையும் என் நண்பன் நானாவையுமே,


நானா :ஒரு வேலை நான் உங்களுடன் இல்லையெனில் நீங்கள் தூக்கு மேடையில் தனிமையை அல்லவா உணர்வீர்கள் ?


நாதுராம் :நீங்கள் எனக்கு உறுதி அளித்துள்ளீர்கள்,


நானா :இரண்டாவது வாக்குறுதி என்ன என்பதையும் சொல்லுங்கள்?


நாதுராம் : இன்று நான் இரண்டு தலையங்கங்களை எழுதி உள்ளேன் இரண்டாவது தலையங்கத்தில் தேதி குறிப்பிடவில்லை,கடவுள் மட்டுமே அந்த தேதியை அறிவார், காந்தி படுகொலைக்கு பின் அக்ரானி செய்தித்தாளில் நீங்கள் அதை அச்சிட வேண்டும்,


நானா :நிச்சயமாக நண்பா முதல் வாக்குறுதியை எதேச்சையாக அளித்துவிட்டேன் ஆனால் இரண்டாவது வாக்குறிதியை வெளியில் இருந்து நிறைவேற்றுவேன்,

(நாதுராம் மட்டும் தற்பொழுது மேடையில் உள்ளார்)  

நானா:என்னையே நான்  சமாதான படுத்தி கொண்டேன் காந்தி தேசத்தந்தை என அழைக்கபட்டாலும் அவர் தனது தந்தைக்குரிய கடமைகளை இந்தியாவிற்கு செய்யாமல் பாகிஸ்தானிற்கு செய்துகொண்டிருந்தார்,இந்த மண்ணின் மைந்தன் என்ற முறையில் நான் ஒரு முடிவிற்கு வந்தேன்,காந்தியை படுகொலை செய்வது இதுவே எனது முக்கியமான முதன்மையான புனித கடமை,

ஜனவரி 30′ 12 மணி அளவில் நான் பிர்லா மாளிகையை அடைந்தேன் ,காந்தி வெளிப்புறத்தில் அமர்ந்து சூரிய ஒளியை ரசித்து கொண்டிருந்தார், வல்லபாய் படேலின் பேத்தி காந்தியின் காலின் கீழ் அமர்ந்து இருந்தார், என்னுடன் என் ரிவால்வரும் இருந்தது, அவரை அங்கேயே படுகொலை செய்திருக்க முடியும் ஆனாலும் நான் சமாதனபடுத்தி கொண்டேன், காந்தியின் படுகொலை அவருக்கு தண்டனையாகவும் அவருக்கு எதிரான சொல்லாகவும் இருக்க வேண்டும் என நினைத்தேன், அவர் கொலையின் பொழுது அதற்க்கு சாட்சி இருக்க வேண்டுமென விரும்பினேன், ஆனால் அங்கே எவருமில்லை, இந்த படுகொலைக்கு பின் தப்ப விரும்பவில்லை இந்த நடவடிக்கைக்கு என் மனதில் கொஞ்சமும் குற்ற உணர்வு இருக்க போவதில்லை, மேலும் நான் சரணடைய வேண்டுமே யாரிடம் சென்று இங்கே சரணடைவது ? மாலை பிரார்த்தனை கூட்டத்திற்கு மக்கள் திரளாக வருவார்கள் ஆகவே ஜனவரி 30 மாலை காந்தியை கொலை செய்ய வேண்டுமென்பதை தீர்மானித்தேன்,

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Create a website or blog at WordPress.com

Up ↑

%d bloggers like this: